பாலக் பன்னீர்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

பாலக் பன்னீர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. ½ கட்டு - பாலக் கீரை
  2. 200 கிராம் - பன்னீர்(சிறு துண்டுகளாக)
  3. 1- பல்லாரி வெங்காயம் (நறுக்கியது)
  4. 2- தக்காளி சாறு (சிறியது)
  5. 2 மேஜைக்கரண்டி - டொமேட்டோ கெச்சப்
  6. 2- பச்சை மிளகாய் (சிறியது)
  7. தலா ½ தேக்கரண்டி - நச்சீரகம் / மல்லித்தூள்
  8. 1 தேக்கரண்டி - மிளகாய் தூள் / கரம் மஸாலா
  9. 1½ தேக்கரண்டி - இஞ்சி பூண்டு விழுது
  10. ¾ கப் - ஃபெரெச் க்ரீம்
  11. ¼ தேக்கரண்டி - நச்சீரகம் + மஞ்சள் தூள்
  12. 2 மேஜைக்கரண்டி - எண்ணெய்
  13. 1 தேக்கரண்டி - வெந்தயக்கீரை. உப்பு தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் நன்றாக கழுவிய பாலக் கீரையை 2 நிமிடம் போட்டு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.(இப்படி செய்வதினால் பச்சை நிறம் மாறாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் பச்சை வாசனையும் நீங்கிவிடும்).

  2. 2

    ஒரு அகன்ற பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் ஊற்றி சூடானதும் நச்சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

  3. 3

    வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்பு தக்காளி சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

  4. 4

    தக்காளி சாற்றின் பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

  5. 5

    மேலும் அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பின்னர் இத்துடன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.

  6. 6

    பின்பு சிறிதளவு டொமேட்டோ கெச்சப் சேர்க்கவும் உடனே வெட்டிய பன்னீர் துண்டுகளையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு அதன் பின் ஃபெரெச் க்ரீம் சேர்த்து கலந்து வைக்கவும். இதற்கு மேல் சிறிதளவு கசக்கிய வெந்தயக்கீரையை தூவி விடவும்.(வெந்தயக்கீரை கடைசியாக சேர்ப்பதன் மூலம் அதனுடைய கசப்பு தன்மை இறங்காமல் பாதுக்காக்கலாம்).பாலக் பன்னீர் தயார்.

  7. 7

    நீங்கள் பரிமாறும் பாத்திரத்திற்கு இதை மாற்றியப் பின்னர் இதற்கு மேல் சிறிதளவு ஃபெரச் க்ரீமை அழகாக ஊற்றி. சிறிதளவு வெந்தயக்கீரையை கசக்கி தூவி பரிமாறவும்.பார்க்க அழகாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும் இந்த பாலக் பன்னீர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் எடுத்துக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes