சிம்பிள் தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

சிம்பிள் தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 டம்ளர் அரிசி
  2. 3 டேபிள் ஸ்பூன் ஆயில்
  3. 5 நாட்டுத்தக்காளி
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. கொஞ்சம்கொத்தமல்லி இலைகள்
  7. கொஞ்சம்புதினா இலைகள்
  8. 2 பச்சை மிளகாய்
  9. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 2 ஸ்பூன் தயிர்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  12. 4 டம்ளர் தண்ணீர்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து கூடவே நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து தக்காளி சுண்டி வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இதில் தயிர் சேர்த்து குறிப்பிட்டுள்ள தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் அரைமணி நேரம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்த்து மூடிபோட்டு 3 அல்லது 4 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes