எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 1 _1/4 கப் கல்கண்டு பொடி
  3. 1/4 கப் மில்க்மெயின்ட்
  4. 1 _1/4 லிட்டர் பால்
  5. 1/2 கப் நெய்
  6. 10 பாதாம்
  7. 10 முந்திரி
  8. 10 பிஸ்தா
  9. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  10. 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
  11. குங்குமப்பூ சிறிதளவு
  12. 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி ஐ நன்கு கழுவி பால் சேர்த்து குழைய வேகவிடவும்

  2. 2

    நன்கு வெந்ததும் பொடி செய்து உள்ள கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பாதாம் பிஸ்தா பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்

  5. 5

    முந்திரி ஐ சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுக்கவும்

  6. 6

    நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது ஏலத்தூள் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறவும்

  7. 7

    பால் மில்க்மெயின்ட் சாதம் எல்லாம் சேர்ந்து வரும் போது சூடான நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    பின் இறக்கி விட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  9. 9

    பின் நீளவாக்கில் நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்பை நெய்யில் வறுத்து பரவலாக போட்டு குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes