2019 ஸ்பெஷல் விருந்து (2019 special virunthu recipe in Tamil)

2019 ஸ்பெஷல் விருந்து (2019 special virunthu recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெஜிடபிள் புலாவ் செய்வதற்கு முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி,கரம் மசாலா சேர்த்து வெங்காயம் நறுக்கிய காய்கறிகள் தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். ஒரு குக்கரில் பால் ஒரு கப் தண்ணீர் ஒரு கப் பால் சேர்த்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து அரிசி கலந்து வதக்கிய காய்கறிகளையும் கலந்து வேகவிடவும். கடைசியாக நெய் சேர்க்கவும். வெஜிடபிள் புலவ் தயார்
- 2
தயிர்சாதம் செய்வதற்கு பச்சரிசியை ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக விடவும். அரிசி வெந்தபிறகு சூடு ஆறியவுடன் அதில் ஒரு மேசைக்கரண்டி தயிர் கலந்து பால் 2 கப் அளவு ஊற்றி கலக்கவும். ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை மிளகாய் சேர்த்து தாளித்து தயிர் சாதத்தில் கலக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்
- 3
முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்வதற்கு முட்டைகோஸ் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும் அ துருவிக் கொள்ளவும். அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கலக்கவும். அதனை உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு குடைமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு அதனுடன் சில்லி சாஸ் சோயா சாஸ் வினிகர் சேர்த்து கலக்கவும். ஒரு நிமிடம் கொதித்த பிறகு கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். பின் பொரித்து வைத்த முட்டை கோஸ் சேர்க்கவும்
- 4
ஸ்வீட் கார்ன் சூப் செய்வதற்கு கார்ன் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சிறிது கேரட் சிறிது கார்ன் சேர்த்து வதக்கி கொண்டு தேவையான அளவு உப்பு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். ஒரு அரை கப் கார்ன் மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். அதன்பின் கான்பிளவர் மாவு தண்ணீரில் கலந்து தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
கேரட் அல்வா செய்வதற்கு துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து குக்கரில் நன்கு மசிய வேக வைத்துக்கொள்ளவும். அதன்பின் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அல்வா கெட்டியான பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து கேரட்டுடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
ஆலு மட்டர் கிரேவி. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு இதனை அரைத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கரம்மசாலா சேர்த்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும். பிண் மசாலாத்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 7
வெள்ளரிக்காய் பச்சடி செய்வதற்கு வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தயிருடன் கலந்து உப்பு பச்சைமிளகாய் சேர்க்கவும்
- 8
ரொட்டி செய்வதற்கு கோதுமை மாவு உப்பு எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அரைமணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்திகளை போட்டு எடுக்கவும்
- 9
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அரிசி வத்தல் பொரித்து எடுக்கவும்
- 10
இப்பொழுது விருந்துக்கான உணவு எல்லாம் தயார். வாங்க சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)
#arusuvai2நாங்கள் லீவுக்கு சென்னைக்கு போகும் பொழுது கண்டிப்பாக மெரினா பீச்சுக்கு செல்வோம். அந்த இதமான குளிர் காற்று மனதை வருடும் போது சோளக்கருது தீயில் சுட்டு விற்கும் அந்த வாசம் நம்மை ஈர்க்கும். அந்தக் குளிருக்கு இந்த காரமான சோளக்கருது சாப்பிட நினைக்கும் போதே இதமாக இருக்கும். கேட்போம், ஆனால் அதை வாங்கி தர மறுத்து விடுவார்கள். ஏனென்றால் தூசு மணல் இருக்கும் எனச் சொல்லி மறுத்து விடுவார்கள். வீட்டிற்கு வந்து எங்களுக்கு இதை வீட்டிலேயே செய்து கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
Masala sweetcorn
#maduraicookingismகுழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சத்தான உணவைக் கொடுப்பது மிக அவசியம் அதன் அடிப்படையில் ஸ்வீட் கான் நல்ல பங்கினை வகிக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
#kerala #photo பத்திரி என்பது அரிசி மாவில் செய்யும் ஒரு கேரளத்து ரொட்டி. அதை நான் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் வைத்து லேயராக செய்துள்ளேன். சுவையோ அபாரம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
- சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
- ஹெல்தி கோவக்காய் பொரியல் (kovakkai poriyal recipe in Tamil)
- கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
- இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)
- பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
கமெண்ட்