எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. மைதா மாவு -1.5 கப்
  2. தயிர் -1கப்
  3. சர்க்கரை -1 கப்
  4. எண்ணெய் -1/2 கப்
  5. டூட்டி ஃப்ரூட்டி -1/2 கப்
  6. உலர் திராட்சை -1 டேபிள்ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் -1டீஸ்பூன்
  9. உப்பு- சிறிதளவு
  10. வெண்ணிலா எசன்ஸ்- 1டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தயிர் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். அதற்கிடையில் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் திராட்சை யுடன் உடன் சிறிது மைதா மாவு கலந்து வைக்கவும்.

  2. 2

    பத்து நிமிடம் கழித்து தயிர் கலவையில் எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து அதனையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதற்கிடையில் ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து அதனை மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் ப்ரீ ஹீட் செய்யவும்.

  3. 3

    கேக் மோல்டில் எண்ணை தடவிய பட்டர் பேப்பர் சேர்த்து அதனுள் கேக் கலவையை ஊற்றவும். இப்பொழுது ஏற்கனவே பத்து நிமிடங்கள் பிரீ ஹிட் செய்த கடாயில் கேக் கலவையை வைத்து அதனை மிதமான சூட்டில் 40லிருந்து 50 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    40 நிமிடங்கள் கழித்து கேக் வெந்து விட்டதா என்பதை ஒரு டூத் பிக் வைத்து உறுதி செய்து கொள்ளவும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது இல்லையெனில் மேலும் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். ஆறிய பின்பு தேவையான வடிவில் கட் செய்து பரிமாறவும். சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes