மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சாத்தமுது என்பதுதான் இதற்க்கு சரியான பெயர். உண்மையாகவே இது அமுதம்தான். அகத்தை சீர் செய்வது சீரகம். இந்த #lockdown நாட்களில் மளிகை கடையில் சாமான்கள் வாங்கி ஒரு மாததிர்க்கு மேல் ஆகிவிட்டது, கோடைக்காலத்தில் என் தோட்டத்திலிருந்து நிறைய காய்கறிகளையும், சமைத்து மீதியான உணவு பொருட்களையும் ஃபரீஜெரில் உறைய வைத்திருந்தேன். அதிலிருந்து உணவு பொருட்களை எடுத்து வீணாக்காமல் தினமும் ஆரோக்கிய சமையில் செய்கிறேன். இந்த ரெசிபியில் இருக்கும் முக்கிய பொருட்கள் மிளகு, சீரகம், பருப்பு பல மாதங்களுக்கு முன்பு வாங்கியது. மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், மூன்றையும் வறுத்து பொடி செய்துக் கொண்டேன் உறைந்த தக்காளி, கறிவேப்பிலை. இஞ்சி மூன்றையும் நல்லெண்ணெயில் வதக்கி நீரில் கொதிக்க வைத்து, வறுத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கூட ரசப்பொடி (பருப்புகள், உலர்ந்த கறிவேப்பிலை, பவழ மல்லி இலை, மிளகு, மிளகாய் பொடி, தனியா எல்லாம் கலந்தது) சேர்த்து வாசனையான நலம் தரும் சாத்தமுது செய்தேன்.
# lockdown#goldenapron3#book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 மேஜைகரண்டி துவரம்பருப்பு
  2. 1 தேக்கரண்டி மிளகு
  3. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  4. 1 தேக்கரண்டி கருஞ்சீரகம்
  5. 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய்
  6. 1 தேக்கரண்டி கடுகு
  7. சிட்டிகை பெருங்காயம்
  8. 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  9. 1 தேக்கரண்டி தோலுரித்த நசுக்கிய இஞ்சி
  10. ¼ கப் கறிவேப்பிலை
  11. ¼ கப் தக்காளி அல்லது ¼ தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste) அல்லது
  12. ¼ கப் எலுமிச்சம்பழச்சாறு
  13. தேவையானஉப்பு
  14. 1/4 கப் கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க. வெந்த பின். மேலிருக்கும் நீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளுக.

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் மூன்றையும் லேசாக வறுக்க. பொடி செய்க.
    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளிக்க, பெருங்காயம், மஞ்சள் பொடி, இஞ்சி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க.
    4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
    1 கப் பருப்பு வேக வைத்த மேல் நீரையும் சேர்க்க.

  4. 4

    ரஸப்பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்க. உப்பு, கொத்தமல்லி சேர்த்து கிளற; ரஸம் தயார்.
    ருசித்ததுப் பார்க்க. பரிமாறுக

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes