முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#lockdown 1
#கோல்டன்அப்ரோன்3
லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
4 பரிமாறுவது
  1. தக்காளி 2
  2. முருங்கைக்காய் 5
  3. பெரிய வெங்காயம் 2
  4. சாம்பார் மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
  5. பூண்டு 1 முழுவதும்
  6. தேங்காய் 1 மூடி
  7. வேர்க்கடலை 100 கிராம்
  8. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  9. உப்பு
  10. தாளிக்க
  11. ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு 1 டீஸ்பூன்
  13. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    முருங்கைக்காய் 5 கழுவி நறுக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.வேக வைத்து வடித்த தண்ணீர் எடுத்து வைக்கவும்.பெரிய வெங்காயம் 2 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.தக்காளி 2 கழுவி நறுக்கி வைக்கவும்.முழு பூண்டு தோல் நீக்கி கழுவி தட்டி வைக்கவும்.தேங்காய் 1 மூடி பத்தையாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வேர்க்கடலை 100 கிராம் தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்த வைக்கவும்.

  3. 3

    கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் ஊற்றி கடுகு 1 டீஸ்பூன் கருவேப்பிலை தாளித்து, தட்டி வைத்த பூண்டு வதக்கி நறுக்கிய தக்காளி,வெங்காயம் சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து, வடித்து வைத்த முருங்கைக்காய் நீர் ஊற்றி 2 கொதி வந்ததும், சாம்பார் மிளகாய் தூள் 3 டீஸ்பூன் சேர்த்து வெந்த முருங்கைக்காய் அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.கிளறி விடவும்.2 கொதி வந்ததும் பொடித்து வைத்த வேர்கடலை பொடியை தூவி கிளறி இறக்கவும்.சுவையான முருங்கைக்காய் வேர்க்கடலை கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes