முள்ளங்கி பராத்தா

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

முள்ளங்கி பராத்தா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 minutes
3  பரிமாறுவது
  1. முள்ளங்கி 2
  2. கோதுமை மாவு 3 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. சர்க்கரை 1 ஸ்பூன்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. கொத்தமல்லி சிறிதளவு
  8. பச்சை மிளகாய் 1
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  11. கரமசாலா 1/2 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

35 minutes
  1. 1

    முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து மாவு காய்ந்து போகாமல் இருக்க மாவு மேல் எண்ணெய் தடவி மூடி வைத்து கொள்ளவும்.

  2. 2

    முள்ளங்கியை தோள் சீவி கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கைகளால் நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து துருவிய முள்ளங்கி, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, சீரகத்தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  4. 4

    பிறகு சப்பாத்தி மாவை ஓரளவு மீடியமான அளவு உருண்டையாக உருட்டி அதை லேசாக தேய்த்து அதன் நடுவில் வதக்கி வைத்த முள்ளங்கியை 2 ஸ்பூன் அளவு வைத்து மூடி நன்கு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

  5. 5

    பிறகு இந்த உருண்டையை கோதுமை மாவில் பிரட்டி கட்டையில் வைத்து சப்பாத்தி போல திரட்டி எடுத்து கொள்ளவும். உள்ளே வைத்து உள்ள ஸ்டவ் வெளியே வராமல் பதமாக தேய்த்து எடுத்து கொள்ளவும்.

  6. 6

    அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அதன் மேல் ஒவ்வொரு சப்பாத்தியை போட்டு தேவையான அளவு எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான முள்ளங்கி பராத்தா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes