ரேஷ்மி பனீர்🧀🌶️

#golden apron3 #book #immunity
பால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunity
பால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍
சமையல் குறிப்புகள்
- 1
பாதி பெரிய வெங்காயம், பாதி குடைமிளகாய், ஒரு தக்காளி மூன்றையும் தனித்தனியாக நீளவாக்கில் சன்னமாக அறிந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும். பத்து முந்திரியை சுடுதண்ணீரில் ஊறவைத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பனீரை நீளவாக்கில் 15 துண்டுகள் தயார் செய்து கொள்ளவும். மசாலா தூள்களை மேற் கூறிய அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு முழு தக்காளியை மிக்ஸியில் அடித்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடாக்கி அதில் முதலில் வெங்காயத்தை சேர்க்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதங்கியபின், நீளமாக அரிந்த குடமிளகாய், மற்றும் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் ஒரு நிமிடம்வதக்கிக் கொள்ளவும். நீண்ட நேரம் வதக்கக் கூடாது. லேசாக நிறம் மாறிய பின் இவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மீண்டும் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, மிதமான தீயில் அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும் பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும். நன்கு வாசம் வரும் வரை கரண்டியில் கிளறிவிடவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாவற்றையும்மிதமான தீயில் செய்யவும்.
- 4
பச்சை வாசம் போகும் வரை தக்காளி வதங்கியபின், மிதமான தீயில் முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவை நன்கு கெட்டியானவுடன் என்னை பிரியும். பிறகு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அல்லது தேவைக்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்க்கவும் அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும். அதனுடன் வதக்கி வைத்த வெங்காயம் குடமிளகாய் தக்காளி கலவையை சேர்க்கவும். பனீர் துண்டுகளை சேர்த்து கரையாமல் கலந்து விடவும்
- 5
5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு அதனுடன் க்ரீமை சேர்க்கவும்.நன்கு கலந்து விட்டு பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விடவும். கடைசியாக அரை ஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும். பன்னீர் கரையாமல் மிதமாக கலந்து விடவும்.
- 6
மிகவும் சுவையான ரேஷ்மி பன்னீர் இப்போது தயார். சப்பாத்தி, நான், தந்தூரி ரொட்டி வகைகளுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
-
-
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
-
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends#indrapriyadharsiniகொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும் Indra Priyadharshini -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்