கேரட் வெஜிடபிள் பக்கோடா

ARP. Doss
ARP. Doss @cook_21334547

கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் கேரட்
  2. ஒரு வாழைக்காய்
  3. ஒரு பெரிய உருளைக்கிழங்கு
  4. 2 பெரிய வெங்காயம்
  5. பச்சை மிளகாய் 5
  6. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. சோம்புத் தூள் ஒரு டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  13. பொட்டுக்கடலை மாவு 250 கிராம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் காய்கறிகளை அனைத்தையும் உங்கள் தேவை தகுந்தார் போல் நறுக்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது திதியும் வைத்துக் கொள்ளலாம்.

  2. 2

    பிறகு ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.அதில் 250 கிராம் அளவு பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக பவுடராக்கி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.

  4. 4

    அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்கவும். அதன்மேல் ஒரு ஸ்பூன் சீரக தூள் ஒரு ஸ்பூன் சோம்பு தூள் அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்.ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இந்தக் கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது இந்த மாவுக் கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீரை சிறுகச்சிறுக சேர்க்கவும் இல்லையென்றால் பகோடா செய்வதற்கு ஏற்றதாக வராது ஆய்வில் நிறைய குறிக்கும்.

  6. 6

    இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்த பிறகு இதை பக்கோடாக்களாக போட்டு எடுத்தால்.

  7. 7

    மீடியம் தீயில் பொரித்தெடுக்கவும். ஐந்து நிமிடத்திலேயே தயாராகிவிடும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் வெஜிடபிள் பக்கோடா தயார் ஆகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இதில் இருக்கும் அனைத்து பொருட்களும் உடம்புக்கு மிகவும் நல்லது ஜீரண சக்தியை கொடுக்க கூடியது கூட பயப்படாமல் அனைவரும் சாப்பிடலாம் ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes