தவல அடை

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient1
#book
தவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது .

தவல அடை

#Nutrient1
#book
தவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
3 பரிமாறுவது
  1. 1கப் கடலை பருப்பு
  2. 1/2கப் புழுங்கல் அரிசி
  3. 1/2கப் பச்சரிசி
  4. 1/2மூடி துருவிய தேங்காய்
  5. உப்பு
  6. தாளிக்க
  7. 1குழி கரண்டி ஆயில்
  8. 1டீஸ்பூன் கடுகு
  9. 2டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  10. 2டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  11. 1 1/2டீஸ்பூன் மிளகு
  12. 8வரமிளகாய்
  13. 10முந்திரி
  14. 1/2டீஸ்பூன் பெருங்காயம்
  15. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    1/2 கப் புழுங்கல் அரிசி,1/2 கப் பச்சரிசி,1 கப் கடலை பருப்பு ஊற விட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    அரைத்த மாவுடன், தேங்காய் துருவல் 1/2 மூடி உப்பு சேர்த்து அரைத்து சேர்க்கவும்.

  3. 3

    உளுந்து பருப்பு 2 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்,முந்திரி 10,மிளகு 1 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். பெருங்காயம் 1/2 டீஸ்பூன்,8 வரமிளகாய் கிள்ளி வைத்து, கருவேப்பிலை எடுத்து வைக்கவும்.அடி கினமான கடாயில் ஆயில் 1 குழி கரண்டி விட்டு கடுகு உளுந்து கடலைப்பருப்பு முந்திரி வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் பொன்னிறமாக தாளித்து,

  4. 4

    தலித்தவற்றை மாவுடன் சேர்த்து கையினால் பிசைந்து வைக்கவும்.

  5. 5

    கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அடை மாவு 2 கரண்டி சேர்த்து விடவும்.

  6. 6

    படத்தில் உள்ளது போல மூடிவைக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.3 நிமிடம் கழித்து கரண்டி வைத்து திருப்பி போடவும். பொன்னிறமாக சிவந்து வெந்து இருக்கும்.

  7. 7

    ஆயில் 1 டீஸ்பூன் விட்டு மறுபடியும் மூடிவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்தால் சுவையான அடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes