ராஜ்மா மசாலா

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#nutrient1

ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.

ராஜ்மா மசாலா

#nutrient1

ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 1கப் ராஜ்மா பயிறு
  2. 3கப் தண்ணீர்
  3. 3தக்காளி
  4. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 11/2டீஸ்பூன் தனியா தூள்
  6. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  7. 1/2டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு
  10. அரைக்க
  11. 3பெரிய வெங்காயம்
  12. 1துண்டு இஞ்சி
  13. 6பல் பூண்டு
  14. தாளிக்க
  15. 1/2டீஸ்பூன் சீரகம்
  16. 7வெந்தயம்
  17. 1பட்டை
  18. 1டேபிள் ஸ்பூன் நெய்
  19. 2டேபிள் ஸ்பூன் ஆயில்
  20. அலங்கரிக்க
  21. 1டீஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    ராஜ்மா பயிறு இரவு ஊற விடவும்.குக்கரில் 3 கப் தண்ணீர்விட்டு 4 விசில் வேக விடவும்.வெந்ததை தண்ணீர் வடித்து வைக்கவும்.

  2. 2

    1 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/2டீஸ்பூன் சீரகத்தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1 1/2 டீஸ்பூன் தனியாதூள்எடுத்து வைக்கவும்.3 பெரிய வெங்காயம் தோல் நீக்கி நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். 3 தக்காளி கழுவி நறுக்கி வைக்கவும்.

  3. 3

    குக்கரில் நெய் 1 டேபிள் ஸ்பூன்,2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு தாளிக்க 1/2 டீஸ்பூன் சீரகம், 1 துண்டு பட்டை,7வெந்தயம் சேர்த்து வணக்கி அரைத்த இஞ்சி பூண்டு விழுது,அரைத்த வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    வதக்கியதில் தக்காளி 3 நறுக்கியது சேர்த்து வதக்கி தண்ணீர் சிறிது சேர்த்து மசாலா பொடிகள் உப்பு சேர்க்கவும்.

  5. 5

    2 நிமிடம் கொதிக்க விடவும்.தக்காளி கரைந்த பிறகு வெந்த ராஜ்மா பயிறு சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    சுவையான ராஜ்மா மசாலா ரெடி.வெண்ணெய் 1 டீஸ்பூன் மேலே சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி, பூரி,நாண்க்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes