கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
#nutrient2
#vitamin
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் குளிர்ந்த தயிர்
  2. 1/2 கப் குளிர்ந்த பால்
  3. 1கேரட்
  4. 2ஏலக்காய்
  5. 4 தேக்கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கேரட்டை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் 2 விசில் வரை வேக விட்டு எடுக்கவும்.

  2. 2

    கேரட் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதுடன் குளிர்ந்த தயிர் மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  4. 4

    சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் லஸ்ஸி. தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes