செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம் கோழிக்கறி
  2. 2டேபிள் ஸ்பூன் தனியா
  3. 11/2ஸ்பூன் மிளகு
  4. 1ஸ்பூன் சோம்பு
  5. 4பட்டை
  6. 2பெரிய வெங்காயம்
  7. 2தக்காளி
  8. 1பிரிஞ்சி இலை
  9. 11/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  12. 4ஸ்பூன் எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, மிளகு, சோம்பு, பட்டை சேர்த்து வறுத்தெடுக்கவும்

  2. 2

    அதே கடாயில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் வறுத்த மசாலா அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பிரிஞ்சி இலை தாளிக்கவும்

  5. 5

    அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  6. 6

    அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  7. 7

    அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்

  8. 8

    அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

  9. 9

    இப்போது வேகவைத்த கோழியை அத்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  10. 10

    அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  11. 11

    குழம்பு கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்..

  12. 12

    சுவையான செட்டிநாடு கோழி மிளகு குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes