கோவக்காய் கறி (Kovaikkaai kari recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#arusuvai 2
காரசாரமான உணவுகள்

கோவக்காய் கறி (Kovaikkaai kari recipe in tamil)

#arusuvai 2
காரசாரமான உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

மூன்று பேர்
  1. 8கோவக்காய்
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 4 பல்பூண்டு
  5. அரைப்பதற்கு
  6. அரை ஸ்பூன்சோம்பு
  7. அரை ஸ்பூன்மிளகு
  8. ஒரு ஸ்பூன்வரக்கொத்தமல்லி
  9. அரை ஸ்பூன்சீரகம்
  10. 2கிராம்பு
  11. ஒரு சிறிய துண்டு பட்டை
  12. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  13. 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல்
  14. ஒரு சிறிய ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  15. ஒரு ஸ்பூன் கடுகு
  16. ஒரு ஸ்பூன்உளுந்து
  17. 4 ஸ்பூன் ஆயில் தாளிப்பதற்கு
  18. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோவைக்காயை கழுவி நீளவாக்கில் அரிந்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். தக்காளியை பொடியாக அரிந்து வைக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.கோவக்காய் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் தேவையான உப்பு ஒரு சிறிய ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். ஒரு டம்ளர் நீர் சேர்த்து மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்

  3. 3

    .. கோவக்காய் முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை சுருள வதக்கி எடுங்கள். சுவையான கோவைக்காய் கறி தயார். சைட் டிஷ் ஆகவும் வைத்துக்கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes