சுண்டவத்தல் புளிக்குழம்பு (Sundavathal pulikulambu recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

சுண்டவத்தல் புளிக்குழம்பு (Sundavathal pulikulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 50கிராம், காய்ந்தசுண்டவத்தல்
  2. 50கிராம், சிறியவெங்காயம்
  3. 1/4மூடி, துருவிய தேங்காய்
  4. புளி- ஒரு சிறிய எலுமிச்சை அளவு,
  5. 4வர மிளகாய்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. தேவையான அளவு, உப்பு
  8. தேவையான அளவு, தண்ணீர்
  9. 1டீஸ்பூன், தனியா,
  10. 1டீஸ்பூன், சீரகம்
  11. 1/2டீஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு வர மிளகாய், சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    இதனை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த சுண்ட வத்தலை வதக்கிக்கொள்ளவும்,புளி கரைசலை தயார் செய்யவும்

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் காய்ந்த மிளகாய், நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனுடன் புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்க்கவும்

  5. 5

    புளிக்கரைசல் கொதித்த பிறகு அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்

  6. 6

    பிறகு வருத்த சுண்டை வற்றலை குழம்புடன்
    சேர்க்கவும்

  7. 7

    சுவையான சுண்ட வத்தல் புளி குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes