எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 1 மீடியம் அளவு நார்த்தங்காய்
  2. ஒரு எலுமிச்சை அளவு புளி
  3. 3 ஸ்பூன் சாம்பார் தூள்
  4. 1குழிக் கரண்டி அளவு எண்ணெய்
  5. ஒரு ஸ்பூன் கடுகு
  6. ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  7. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  8. 1 ஸ்பூன் வெந்தயம்
  9. 3ஸ்பூன் வெல்லம் அல்லது சர்க்கரை
  10. உப்பு தேவையான அளவு
  11. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நார்த்தங்காயை கழுவி துண்டுகளாக அரிந்து கொள்ளவும். (ஊறுகாய்க்கு அறிவது போல்.) ஒரு எலுமிச்சை அளவு புளி தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும் கொஞ்சமாக கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொரிந்தவுடன் அரிந்து வைத்த நார்த்தங்காயைத் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். காய் வதங்கியவுடன் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளித்தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மூடி வைத்து வேக விடவும்.

  3. 3

    5 நிமிடத்திற்கு மேல் வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும் பிறகு.வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு சிவக்க வறுத்துக்கொள்ளவும். வருத்த இவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெந்த நார்த்தங்காயை இப்போது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    சர்கரை சேர்த்தவுடன், வறுத்த பொடியை சேர்த்துக் கொள்ளவும். லேசாக கொதிக்கவிடவும்.நன்கு ஆற வைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

  5. 5

    இந்த குழம்பு முதலில் சாப்பிடச் இது கசப்பாக இருக்கும். மூன்று நான்கு நாள் கழித்து சாப்பிட கசப்பு இருக்காது. இட்லி தோசை சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes