நார்த்தங்காய் குழம்பு (Naarthankaai kulambu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

நார்த்தங்காய் குழம்பு (Naarthankaai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பேர்
  1. 1 மீடியம் அளவு நார்த்தங்காய்
  2. 1பெரிய எலுமிச்சைப்பழ அளவு புளி
  3. 3ஸ்பூன் சாம்பார் தூள்
  4. உப்புதேவையான அளவு
  5. 4ஸ்பூன் எண்ணெய்
  6. 1 ஸ்பூன் கடுகு
  7. 1ஸ்பூன் வெந்தயம்
  8. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 4ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மீடியம் அளவு நார்த்தங்காய் ஒன்றை படத்தில் காட்டி உள்ளபடி பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடவும்.ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு புளியை ஊற வைத்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும். நீர்க்க கரைக்க வேண்டாம்.

  2. 2

    இப்போது கடுகுடன் அரிந்த நார்தங்கயை நன்கு வதக்கி கொள்ளவும்.பிறகு அதில் 3 ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை வதக்கி கொள்ளவும். பிறகு கரைத்து வைத்த புளியை சேர்த்து காயில் சேர்க்கவும். மூடி வைத்து நன்கு வேக விடவும்.

  3. 3

    ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு,ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் சிவக்க வறுக்கவும். அதை பொடி செய்து கொள்ளவும்.இதை வெந்த காயில் சேர்த்து கிளறவும். கடைசியாக வெல்லம் அல்லது சர்க்கரையைச் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    நார்த்தங்காய் புளி குழம்பு ரெடி. இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes