எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேருக்கு
  1. 2 கப் நறுக்கிய பாகற்காய்
  2. 3நெல்லிக்காய் அளவு புளி
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 15 பல் பூண்டு
  5. 3 தக்காளி
  6. 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 கப் தேங்காய் துருவல்
  9. 5 காய்ந்த மிளகாய்
  10. 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  11. 2 ஸ்பூன் கொத்தமல்லி
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  14. 1/4 ஸ்பூன் கடுகு
  15. 1 ஸ்பூன் ‌‌ ஜீரகம்
  16. சிறிதளவுபெருங்காயம்
  17. சிறிதளவுகறிவேப்பிலை
  18. தேவையானஅளவு நல்லெண்ணெய்
  19. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாகற்காயைப் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, கொத்தமல்லி, சோம்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸ் பண்ணி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுத்து பூண்டு, வெங்காயம் இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் கடுகு, ஜீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, அதனோடு பாகற்காயை சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பாகற்காய் நன்கு வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes