பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. அரை கிலோ கோதுமைமாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 5 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2பெரிய உருளைக்கிழங்கு
  6. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 துண்டு இஞ்சி
  8. 8பச்சை மிளகாய்
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. தேவையான அளவுஉப்பு
  11. 6ஸ்புன் கடலைமாவு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    கோதுமைமாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் பூரி தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரி போட்டு சிவந்தவுடன் எடுத்து கொள்ளுங்கள்

  2. 2

    மசாலுக்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும். உருளைகிழங்கு பொடியாகநறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போடவும் நன்றாக வதக்கவும், சிறிது தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் க. மாவு கட்டி இல்லாமல் கரைத்து மாலில் ஊற்றி சிறிது கொதிக்கவிடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். பூரி, மசால் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes