ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)

எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.
#hotel
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.
#hotel
சமையல் குறிப்புகள்
- 1
சீராக சம்பா அரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
இப்போது வெங்காயம், தக்காளி, மல்லி, காளான் எல்லாம் நறுக்கி வைக்கவும்.
- 4
குக்கரை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், எண்ணை, நெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி சேர்த்து அரைத்த விழுது, மல்லி, புதினா சேர்த்து வதக்கி, மேலே கொடுத்துள்ள எல்லா பொடிகள், தயிர் சேர்த்து,பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து வதக்கி, பின் கழுவி, நெய் கலந்து வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு வதக்கி 1&1/2கப் தண்ணீர் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மூடி வைத்து ஒரு விசில் விடவும்.
- 6
உடனே குக்கரை மாற்றி சூடு செய்துள்ள தோசை தவா மேல் இருப்பது நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.
*** குக்கர் வைக்கும் போதே வேறு ஸ்டாவில் தோசை தவாவை வைத்து சூடு செய்யவும். - 7
பின்னர் இறக்கி ஆவி தணிந்தவுடன், நறுக்கி வைத்துள்ள மல்லி, புதினா, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால் சுவையான, ஹோட்டல் காளான் பிரியாணி வீட்டிலேயே தயார்.
- 8
இதே போல் அனைவரும் வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் காளான் பிரியாணி செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala -
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
தவா புலாவ் (Tawa pulao mumbai style)
தவா புலாவ் செய்வதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. தோசை தவாவிலேயே எல்லாம் சேர்த்து கலக்குவதால், மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.தவாவில் ஓரங்கள் உயர்வாக இல்லாததால் கலக்குவது கஷ்டம்.#hotel Renukabala -
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya -
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
-
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala -
-
திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani
#bake #withoutoven #india2020 பார்ட (parda) பிரியாணி இந்த பிரியாணி பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும் இதனை கேக் பிரியாணி , பன் பிரியாணி என்று கூறுவார்கள் Viji Prem -
சென்னா ஸ்பைசி பிரியாணி(channa biryani recipe in tamil)
#RDஇந்த பிரியாணி நல்ல ருசி.அசைவ பிரியாணி மாதிரி தான் பண்ணி இருக்கிறேன்.vegசாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala
More Recipes
கமெண்ட் (9)