எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரங்கள்
4 பரிமாறுவது
  1. பெரிய வெங்காயம்-2
  2. தக்காளி-6
  3. பச்சை மிளகாய்-3
  4. புதினா-1கப்
  5. கொத்தமல்லி-1\2கப் தழை
  6. கறிவேப்பிலை-1கொத்து
  7. பொன்னி அரிசி-கால் படி
  8. பட்டை, இலை, ஜாதிபத்திரி, ஸ்டார் பூ-தலா 1 துண்டு
  9. சோம்பு, வெந்தயம்-தலா1\2ஸ்பூன்
  10. காஷ்மீரி மிளகாய்த்தூள்-1 டேபிள் ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  12. இஞ்சி, பூண்டு விழுது-1டேபிள் ஸ்பூன்
  13. எண்ணெய், நெய்-தலா 2 டேபிள் ஸ்பூன்
  14. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரங்கள்
  1. 1

    வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை பொடிதாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி எடுத்து கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவிடவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு நன்கு காய்ந்ததும் தாளித பொருட்களை சேர்த்து, பிறகு ப.மிளகாய், கருவேப்பிலை வதக்கவும்

  3. 3

    பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பிறகு தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசிய வதக்கவும். பிறகு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து அனைத்தையும் ஒரு சேர வதக்கவும்

  5. 5

    பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போக கிளறி விடவும்

  6. 6

    பிறகு ஊற வைத்த அரிசியை நன்கு தண்ணீர் வடிய விட்டு சேர்த்து கிளறி மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்திருக்கவும். ஒன்றுக்கு இரண்டரை அளவு தண்ணீர் சேரக்கவும்

  7. 7

    இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் கொதி வர ஆரம்பித்ததும், குக்கரை மூடி ஒரு விசில் மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும். தக்காளி சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes