எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30  நிமிடம்
2 பரிமாறுவது
  1. 6பிரெட் துண்டுகள்
  2. தேவையானஅளவு வெண்ணெய்
  3. குருமா செய்ய தேவையானவை :
  4. 1 வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. 1 கேரட்
  11. 10 பீன்ஸ்
  12. 1/2கப் காலிஃப்ளவர்
  13. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 1ஸ்பூன் மல்லி தூள்
  16. 1ஸ்பூன் கரமசாலா
  17. 1/4கப் தேங்காய்
  18. 2 பட்டை
  19. 2 கிராம்பு
  20. 2ஸ்பூன் சோம்பு
  21. 5 முந்திரி பருப்பு
  22. சிறிதாக கல்பாசி
  23. 1மேசைக்கரண்டி எண்ணெய்
  24. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30  நிமிடம்
  1. 1

    அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் வெண்ணெய் தடவி அதன் மேல் பிரெட் துண்டுகளை வைத்து வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் 1ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, 1 பட்டை, கல்பாசி சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.

  4. 4

    இதில் மிளகாய் தூள், கரமசாலா, மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  5. 5

    மிக்ஸியில் தேங்காய், 1 பட்டை, கிராம்பு, 1ஸ்பூன் சோம்பு, முந்திரி பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.பிறகு சிறிதளவு கொத்தமல்லி தூவி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    சுவையான குருமா தயார். இந்த குருமா டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes