சிக்கன் லைம் சூப்

Abdiya Antony
Abdiya Antony @cook_20751641

#Cookwithfriends #Abi&sumi
#Chickenlime soup(Immunity booster)
சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு.

சிக்கன் லைம் சூப்

#Cookwithfriends #Abi&sumi
#Chickenlime soup(Immunity booster)
சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் எலும்பு நீக்கிய சிக்கன்
  2. ஒரு கேரட்
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. குடைமிளகாய் ஒன்று
  6. எலுமிச்சை பழம் ஒன்று
  7. ஜீரகம் 2 டேபிள்ஸ்பூன்
  8. மிளகு 2 டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் சிறிதளவு
  10. சிகப்பு வத்தல் தூள் ஒரு தேக்கரண்டி
  11. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  12. பூண்டு 5 பல்
  13. இஞ்சி சிறிதளவு
  14. உப்பு தேவைக்கு ஏற்ப
  15. 2 மேஜைக்கரண்டி ஆயில்
  16. சிறுதுண்டுகளாக நறுக்கிய மல்லித்தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் கேரட் குடைமிளகாய் தக்காளி அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக சதுர வடிவில் நறுக்கிக்கொள்ளவும்.

  2. 2

    ஜீரகம் மற்றும் நல்ல மிளகை பொடியாக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் என்னை விட்டு வெங்காயம், தக்காளி, கேரட், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகு சீரக பொடியை சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூள், வத்தல் தூள், மல்லித்தூள், சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

  4. 4

    நறுக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு 750 மில்லி தண்ணீர் ஊற்றவும். 10 முதல் 15 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் போது காய்கறிகளிலுள்ள சூப் மற்றும் சிக்கனில் உள்ள சூப் நன்றாக இரங்கும், சுவையாக இருக்கும். 15 நிமிடங்கள் கழித்து சூப்பை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும். நறுக்கி வைத்துள்ள எலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றை பிழிந்து விடவும். நறுக்கிய மல்லி தழை சூப் மேல் தூவி பரிமாறவும்.

  5. 5

    சுவையான ஆரோக்கியமான கோழி எலுமிச்சை சூப் ரெடி. எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abdiya Antony
Abdiya Antony @cook_20751641
அன்று

Similar Recipes