கீரை சாதம் (Keerai satham recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

கீரை சாதம் (Keerai satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கட்டு சிறு கீரை
  2. 1கப் அரிசி
  3. 1/2கப் துவரம் பருப்பு
  4. 6பல் பூண்டு
  5. 2காய்ந்த மிளகாய்
  6. 3பச்சை மிளகாய்
  7. 2பெரிய வெங்காயம்
  8. 2-3 தக்காளி
  9. 1ஸ்பூன் கடுகு
  10. 1/2ஸ்பூன் சீரகம்
  11. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் பெருங்காய தூள்
  13. எண்ணெய்
  14. 1ஸ்பூன் நெய் (விரும்பினால்)
  15. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிறு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக கலந்து நன்றாக கழுவி 1க்கு 2பங்கு வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3விசில் வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் கீரையில் 1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். (விரும்பினால் மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள் சேர்க்கலாம்). பின்னர் வேக வைத்த பருப்பு சாதத்தை கீரையுடன் சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும். சுவையான சிறு கீரை சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes