சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. உப்பு தேவையான அளவு
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  5. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. 1 ஸ்பூன் மைதா
  7. 1 ஸ்பூன் கார்ன் ப்ளார்
  8. 1/2 ஸ்பூன் அரிசி மாவு
  9. 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  10. 2 டேபிள்ஸ்பூன் வறுத்து பொடி செய்த தேங்காய் பொடி
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. அரைக்க:
  14. 2 ஸ்பூன் சோம்பு
  15. 1 ஸ்பூன் சீரகம்
  16. 1/2 ஸ்பூன் மிளகு
  17. 1/2 ஸ்பூன் கசகசா
  18. 2 பட்டை
  19. 2 கிராம்பு
  20. 8பல் பூண்டு
  21. இஞ்சி சிறிய துண்டு
  22. 4பச்சை மிளகாய்
  23. கோட்டிங் செய்ய:
  24. 1 முட்டை
  25. 1/2 கப் ப்ரட் க்ரம்ஸ்
  26. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் ஐ சுத்தம் செய்து அலசி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி சிக்கனை மட்டும் தனியே எடுத்து ஆறவிடவும்

  2. 2

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும் பின் சிக்கனை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் மைதா,அரிசி மாவு,கார்ன் ப்ளார், பொட்டுக்கடலை மாவு, மற்றும் தேங்காய் பொடி, கரம் மசாலா தூள் எல்லாம் சேர்ந்து சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  6. 6

    பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும் பின் உருண்டைகளை முட்டையில் தோய்த்து ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி ஒரு தட்டில் அடுக்கவும் பின் இதை பிரிட்ஜில் அரை மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை வைக்கவும்

  7. 7

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  8. 8

    இதே போல மீன், மட்டன், பயன்படுத்தி செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes