கர்நாடகா ஸ்பெஷல் மதுர் வடா🍽️☕ (Mathur vada recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#deepfry
இது கர்நாடக மாநித்திலுள்ள மதுர் என்ற ஊரில் செய்யபடும் ஸ்பெஷல் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.அதனால் இதற்கு பெயர் மதுர் வடா ஆகும்.இந்த மாநிலத்தில் நடக்கும் விஷேஷங்களில் இது முக்கியமாக விருந்தில் பரிமாறப்படும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 எண்ணிக்கை
  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/2 கப் ரவை
  3. 1/4 கப் மைதா
  4. 2 டேபிள் ஸ்பூன் நிலக்கடலை
  5. 2 டேபிள் ஸ்பூன் எள்ளு
  6. 1 ஸ்பூன் உப்பு
  7. 1/4 ஸ்பூன் பெருங்காய தூள்
  8. 1 ஸ்பூன் நெய்
  9. 1 ஸ்பூன் சில்லி flakes அல்லது 1 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த எண்ணெய்
  11. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  12. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  13. 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
  14. கொஞ்சம்கருவேப்பிலை நருக்கியது
  15. பொரிக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 2 பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ரெண்டு டேபிள்ஸ்பூன் நிலக்கடலை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வறுத்த எள்ளு எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு 1ஸ்பூன் அல்லது தேவையான அளவு.

  2. 2

    கப் அரிசி மாவு, அரை கப் ரவை, கால் கப் மைதா எடுத்துக் கொள்ளவும் இதில்,பெருங்காயத் தூள்,வறுத்த எள்ளு, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் நிலக்கடலை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.அரிந்த வெங்காயம் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 10 நிமிடம் வைத்து விடவும் வெங்காயத்தில் உள்ள நீர் விட்டு விடும்.பிறகு இதில் அரிசி மாவு கலவையை சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் காய விடவும். உருட்டிய உருண்டைகளை உள்ளங்கையில் தட்டி மிதமான தீயில் இரண்டு புறமும் நன்கு திருப்பி விட்டு பொரித்து எடுக்கவும். மொத்தமாகவும் இல்லாமல் மெலிதாகவும் இல்லாமல் மீடியம் அளவில் தட்டிக் கொள்ளவும். இருபுறமும் சிவக்க எடுக்கவும்.

  4. 4

    இதேபோல் எல்லா வடைகளையும் சுட்டு எடுக்கவும். இது மதிய விருந்தில் சாப்பாட்டுடன் சாப்பிடலாம். மாலை நேர சிற்றுண்டியாக சட்னி வகைகள் உடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

  5. 5

    சுவையான மொறுமொறுப்பான மத்தூர் வாடா காபியுடன் ரெடி. வாருங்கள் சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes