வரகு தயிர் சாதம்(varagu curd rice recipe in tamil)

வரகு தயிர் சாதம்(varagu curd rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரகு சுமார் 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.அதை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். வருத்த வரகை கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைக்கவும். தலா ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி துண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை கொத்தமல்லி அனைத்தும் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய கேரட் எடுத்து தோல் சீவி 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் வருமளவிற்கு துருவிக்கொள்ளவும். இதற்கிடையில் மூன்று கப் அளவிற்கு காய்ச்சிய பாலை எடுத்துக் கொள்ளவும்.
- 3
15 நிமிடம் வரகு ஊறிய பிறகு குக்கரில் சேர்த்து 3 கப் தண்ணீர் 3 கப் பால் சேர்த்து மூடி வைத்து 2 சவுண்ட் விடவும். பிறகு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைத்திருந்து ஆப் செய்யவும்.
- 4
வரகு பால் தண்ணீரில் நன்கு குழைய வெந்து விடும். இதை நன்றாக கரண்டி கொண்டு மசித்து விடவும். ஒரு வானவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை சேர்த்து வதக்கவும். தாளித்த பொருள் + துருவிய கேரட், நறுக்கிய கொ.மல்லி க.இ எல்லாவற்றையும் வரகு சாதத்தில் உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு அரை கப் அளவிற்கு புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். சூப்பரான சுவையான ஆரோக்கியம் நிறைந்த வரகு தயிர் சாதம் ரெடி.
- 5
குறிப்பு: அப்போதே சாப்பிட வேண்டும் என்றால் அரை கப் அளவிற்கு புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும். காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து கலந்து வைக்கவும் தானே புளித்துவிடும். வெயில் காலத்தில் கால் ஸ்பூன் தயிர் சேர்த்தால் போதும். மதியம் அல்லது வெளியூருக்கு செல்லும் போது வழியில் சாப்பிட எடுத்து செல்வது என்றால் பாலியிலேயே வேகவைத்து கால் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். வெயில் காலம் என்றால் ஒரு சொட்டு தயிர் சேர்த்தால் போதும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D -
-
-
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
-
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
-
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும். Gayathri Ram
More Recipes
கமெண்ட்