பிசிபெல்லாபாத்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

பிசிபெல்லாபாத்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி
  2. 1/2 கப் துவரம் பருப்பு
  3. 1/4 கப் பட்டாணி (8 மணி நேரம் ஊற வைக்கவும்)
  4. 1/4 கப் வேர்கடலை
  5. 1 கப் நறுக்கிய காய்கள்
  6. 7-10 சின்ன வெங்காயம்
  7. நெல்லிக்காய் அளவுபுளி (15 நிமிடம் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்)
  8. 3/4 டேபிள்ஸ்பூன் வெல்லம்
  9. உப்பு
  10. மசாலா அரைக்க
  11. 1 டேபிள்ஸ்பூன் தனியா விதை
  12. 1 டீஸ்பூன் உளுந்து
  13. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  14. 1 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  15. சிறிதுவெந்தயம்
  16. 2 பட்டை
  17. 2 லவங்கம்
  18. 3-5 வர மிளகாய்
  19. தாளிக்க
  20. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  21. கடுகு
  22. 1 சீரகம்
  23. 5 -8 முந்திரி
  24. கறிவேப்பிலை
  25. சிறிதுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் கழுவிய அரிசி பருப்புடன் ஊற வைத்த வேர்க்கடலை பட்டாணி உப்பு 3 -1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும் பிறகு வெந்த பிறகு மெதுவாக மசித்துக்கொள்ளவும்

  2. 2

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து பொடியாக அரைத்து புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்துக்கொள்ளவும் இத்துடன் வெல்லம் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் நறுக்கிய காய் உடன் வெங்காயம் தண்ணீர் சேர்த்து அரைத்து வேக வைக்கவும் காய்களை பதம் வெந்த பிறகு கலந்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு இதில் மசித்து வைத்த அரிசி பருப்பை சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் வைக்கவும்

  5. 5

    சிறு கடாயில் நெய் ஊற்றி காய்ந்த இதில் கடுகு,சீரகம் போட்டு தாளிக்கவும் பிறகு இதில் முந்திரி பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளித்து கலந்து வைத்த கலவையில் சேர்க்கவும்

  6. 6

    சுவையான பிசிபெல்லாபாத் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes