வெஜிடபிள் பிரியாணி

Kanish Ka
Kanish Ka @cook_26282084

அம்மா செய் முறைப் போல....
#the.chennai.foodie contest

வெஜிடபிள் பிரியாணி

அம்மா செய் முறைப் போல....
#the.chennai.foodie contest

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 - 40 நிமிடங்கள்
2 நபர்
  1. நெய் 50 கிராம்
  2. சுருள் பட்டை 4
  3. கிராம்பு 4
  4. பிரியாணி இலை 2
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 1
  7. கேரட் 1
  8. பீன்ஸ் 100 கிராம்
  9. பட்டாணி 50 கிராம்
  10. புதினா
  11. தயிர் - 2 ஸ்பூன்
  12. எலுமிச்சை பழம் - 1/2
  13. பாஸ்மதி அரிசி 1 1/2 கப்
  14. இஞ்சி பூண்டு விழுது
  15. உப்பு
  16. மிளகாய்த் தூள்
  17. பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 - 40 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு குக்கரில், நெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரியாணி இலை,பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

  3. 3

    பொன்னிற ஆகிய பின்னர் புதினா, தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  4. 4

    இதோடு கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்து வதக்கிய பின்னர், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    ஒரு கிளாஸ் அரிசி - ஒரு கிளாஸ் தண்ணீர் என்ற விகிதத்தில், இந்த காய்கறி கலவையுடன் தண்ணீர் ஊற்றவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் கொதிக்கும் காத்திருக்கவும்.

  6. 6

    நன்கு தண்ணீர் கொதித்தவுடன், பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். நன்றாக கிளறி, குக்கரை மூடி விட்டு, 1 விசில் வந்த பின் அடுப்பை நிறுத்தவும்.

  7. 7

    திறந்த பின், 2 தேக்கரண்டியளவு நெய் ஊற்றி, புதினா வை தூவி ஆவி பறக்க பரிமாறவும்.

  8. 8

    வெங்காய தயிர் பச்சடி இதற்கான சரியான சைடு டிஷ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanish Ka
Kanish Ka @cook_26282084
அன்று

Similar Recipes