பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும்.

பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)

#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோவெண்டைக்காய்
  2. பொடி அரைக்க:
  3. ஒரு டேபிள்ஸ்பூன்தனியா
  4. ஒரு டேபிள்ஸ்பூன்சீரகம்
  5. 2வர மிளகாய்
  6. ஒரு டேபிள்ஸ்பூன்வேர்க்கடலை
  7. புலி மிகச்சிறிய அளவு
  8. 5பூண்டு பல்
  9. தாளிப்பு:
  10. கடுகு ஒரு டீஸ்பூன்
  11. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  13. சீரகம் அரை டீஸ்பூன்
  14. பச்சை மிளகாய் ஒன்று
  15. கருவேப்பிலை சிறிதளவு
  16. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் தனியா,சீரகம்,வரமிளகாய் இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து இதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து பூண்டு,புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை பொரித்தெடுக்கவும்

  3. 3

    அதே வாணலில் தாளிக்க தேவையான எண்ணையை எடுத்து கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் வறுத்த வெங்காயம் வதக்கி தேவையான உப்பு சேர்த்து மசாலா பொடி 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  4. 4

    சுவையான பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes