உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#GA4
இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3உருளைக்கிழங்கு
  2. 1தக்காளி
  3. 1வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 8பூண்டு பல்
  6. 1 கப்தேங்காய் துருவல்
  7. 1 ஸ்பூன்சோம்பு
  8. 1/2 ஸ்பூன்சீரகம்
  9. 1/4 ஸ்பூன்கசகசா
  10. 1/2 ஸ்பூன்கடுகு
  11. 3 ஸ்பூன்மல்லித்தூள்
  12. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  13. 1 ஸ்பூன்கரம்மசாலா
  14. 1/4 ஸ்பூன்மஞ்சள்தூள்
  15. கருவேப்பிலை
  16. உப்பு
  17. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து சின்னச் சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    தேங்காய்,சோம்பு,சீரகம், கசகசா, பூண்டு எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு,கடுகு,பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலா தூள் போட்டு வதக்கவும்.

  6. 6

    எல்லாம் வதங்கியதும் உருளைக்கிழங்கை போட்டு கிளறி உப்பு போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  7. 7

    பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  8. 8

    சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes