பாலக்பன்னீர்

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4 #cookwithmilk புரோட்டீன் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ள இந்த பாலக் கீரை மற்றும் பன்னீர் வைத்து நான் செய்த பாலக் பன்னீர் மிகவும் அருமையாக இருந்தது. #cookwithmilk #GA4

பாலக்பன்னீர்

#GA4 #cookwithmilk புரோட்டீன் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ள இந்த பாலக் கீரை மற்றும் பன்னீர் வைத்து நான் செய்த பாலக் பன்னீர் மிகவும் அருமையாக இருந்தது. #cookwithmilk #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 கட்டு பாலக்கீரை
  2. 50 கிராம் பன்னீர்
  3. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2 டீஸ்பூன்சீரகத்தூள்
  5. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. வறுத்து அரைக்க
  11. 1 பெரிய வெங்காயம்
  12. 1 பெரிய தக்காளி
  13. 1/2 டீஸ்பூன் சீரகம்
  14. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  15. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பன்னீரை சதுரங்களாக நறுக்கி வைக்கவும் வெங்காயம், தக்காளி கட் பண்ணவும்

  2. 2

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் வறுத்த வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாலக் கீரையை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டவும் பிறகு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து அலசவும்.

  4. 4

    இப்போது கீரை, வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி விழுது இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு தூள் வகைகளை சேர்க்கவும் கரம்மசாலா தவிர, அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும்.

  6. 6

    பன்னீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிண்டி மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும் மிதமான தீயில். கரம் மசாலா தூளை சேர்க்கவும்.

  7. 7

    இப்போது அடுப்பை ஆஃப் செய்து ஒரு ஸ்பூன்ஃப்ரஷ் கிரீம் கலந்து இறக்கவும்.

  8. 8

    நம் பாலக் பன்னீர் ரெடி ஆகி விட்டது இப்போது சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes