தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 கப் பச்சரிசி
  2. 1 கப் + 1/4 காய்ச்சிய பால்
  3. 3/4 கப் கற்கண்டு
  4. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  5. சிறிதுமுந்திரி, திராட்சை
  6. சிறிதுஏலங்காய் தூள்
  7. அலங்கரிக்க விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் அரிசியை சேர்த்து இரண்டு முறை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு குக்கரில் 1 கப் பால் சேர்த்து மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்

  2. 2

    15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சாதத்தை மெதுவாக மசித்து விடவும், மற்றொரு பாத்திரத்தில் கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கற்கண்டு கரையும் வரை கொதிக்க வைக்கவும்

  3. 3

    மசித்த சாதத்தில் சிறிது பால் ஊற்றி நன்றாக கலந்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும், பிறகு இதில் கரைத்து வைத்திருக்கும் கற்கண்டை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்

  4. 4

    அரிசியும் கற்கண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து கெட்டியாகி வரும் பொழுது அடுப்பை அணைத்து வறுத்து வைத்திருக்கும் திராட்சை, முந்திரி,ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்

  5. 5

    தித்திப்பான கற்கண்டு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes