கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப்துருவிய கேரட்
  2. நறுக்கிய வெங்காயம் சிறிதளவு
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. கொத்தமல்லி இலை சிறிதளவு
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் சோம்பு
  8. 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  9. 1 ஸ்பூன் ரவை
  10. 2 ஸ்பூன் அரிசி மாவு
  11. 1 கப் கடலை மாவு
  12. உப்பு தேவையான அளவு
  13. 3 பச்சை மிளகாய்
  14. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  15. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய கேரட்,நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சிறிதளவு,கொத்தமல்லி இலை சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    சீரகம், சோம்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், ரவை, அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசையவும்

  4. 4

    கடலை மாவு சேர்த்து தண்ணீர் விடாமல் ஒரு ஸ்பூன் எண்ணெய் மட்டும் சேர்த்து பிசையவும்

  5. 5

    பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்

  6. 6

    இப்பொழுது மொறு மொறுப்பான கேரட் பக்கோடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes