திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரஷர் குக்கரில் மட்டன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 5விசில் வரை வேக வைக்கவும். சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி 20நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
மசாலா தூள் அரைக்க மிக்சி ஜாரில் தனியா, முந்திரி, சீரகம், கல்பாசி, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, ஜாவித்திரி, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு பொடியாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து மசாலா விழுதிற்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். வெங்காய விழுது நிறம் மாறி பச்சை வாசனை போன பின் அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல்லுப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- 4
பின் வேக வைத்த மட்டன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து கிளறவும். இதில் எலுமிச்சை சாறு, தயிர், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும். அடுத்து ஊற வைத்த அரிசி மற்றும் சூடு தண்ணீர் சேர்த்து (1கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் வீதம்)கலக்கவும்.
- 5
பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். அரிசி பாதி வெந்ததும் அடுப்பில் தோசைக்கல் வைத்து அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி மூடவும். பின் மூடியின் மேல் கனமான பாத்திரம் வைத்து மிதமான தீயில் 20நிமிடம் தம் கட்டி எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
More Recipes
கமெண்ட் (2)