தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 2 கப் சாப்பாட்டு அரிசி (இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்)
  2. 2 கப் விருப்பப்பட்ட காய்கறிகள்
  3. 2நறுக்கிய வெங்காயம்
  4. 2 தக்காளி (அரைத்து கொள்ளவும்)
  5. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  8. 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  9. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  12. உப்பு
  13. 1/2 எலுமிச்சை சாறு
  14. அரைக்க
  15. 1ஒரு கைப்பிடி புதினா,கொத்தமல்லி
  16. 2 பச்சை மிளகாய்
  17. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  18. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  19. 2 பட்டை
  20. 4 லவங்கம்
  21. 1பிரிஞ்சி இலை
  22. 1 அன்னாச்சி பூ

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ சேர்க்கவும்... பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் இதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  2. 2

    தக்காளியை அரைத்துக் கொள்ளவும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

  3. 3

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும் பிறகு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி அதில் மசாலா பொருட்களுடன் மிளகாய்த்தூள்

  5. 5

    தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா

  6. 6

    சிக்கன் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அதன் பிறகு தயிர் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்

  7. 7

    இப்போது நான்கு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் குத்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்

  8. 8

    அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விடவும்

  9. 9

    பிறகு 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து மெதுவாக கிளறவும்

  10. 10

    சாப்பாட்டு அரிசியில் சுவையான காய்கறி பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes