தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4# week5 அரிசி தேங்காய் சேர்த்து அரைத்து சுடும் பஞ்சு போல் மிருதுவான தோசை..

தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)

#GA4# week5 அரிசி தேங்காய் சேர்த்து அரைத்து சுடும் பஞ்சு போல் மிருதுவான தோசை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் பச்சரிசி
  2. 1கப் தேங்காய் துருவல்
  3. உப்பு,
  4. தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    அரிசி, 2-3 மணி நேரம் தண்ணியில் ஊறவிடவும்

  2. 2

    அரிசியை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு முக்கால் பாகம் அரைந்ததும் அத்துடன் தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கவும்

  3. 3

    தோசை மாவு பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.

  4. 4

    தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, சுத்தி தேங்காய் எண்ணெய் விட்டு தோசை சுடவும்.

  5. 5

    சீக்கிரம் தோசை வெந்துவி டும்.. திருப்பி போட்டு எடுத்து விடவும்.. இந்த தோசைக்கு மாவு புளிக்க வேண்டிய அவசியமி ல்லை. அரைத்த உடன் தோசை சூட்டுடலாம்.. தக்காளி சட்னி, மிளகாய் சட்னியுடன் தொட்டு சாப்பிட டேஸ்டா இருக்கும்..

  6. 6

    நார்மல் தோசை சுடற மாதிரியும் செய்யலாம், ரவா தோசை மாதிரியே கொஞ்சம் தண்ணியாக எடுத்து ஊற்றியும் சுடலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes