பிரசாத கலவை (Prasaatha kalavai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பிரசாத கலவை (Prasaatha kalavai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. தக்காளி சாதம்:
  2. 2 கப் வடித்த சாதம்
  3. 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  4. 8 தக்காளி
  5. 4 பச்சை மிளகாய்
  6. 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. மசாலா அரைக்க:
  13. 6 பல் பூண்டு
  14. 1 துண்டு இஞ்சி
  15. 2 பட்டை
  16. 2 கிராம்பு
  17. 2 ஏலக்காய்
  18. 1பிரியாணி இலை
  19. ஜாதிபத்ரி சிறிது
  20. 1 அன்னாச்சி பூ
  21. 1 ஸ்பூன் சோம்பு
  22. லெமன் சாதம் செய்ய:
  23. 1_1/2 கப் வடித்த சாதம்
  24. 2 லெமன்
  25. 1/2 கப் வெங்காயம்
  26. 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  27. 1 ஸ்பூன் கடுகு
  28. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  29. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  30. 5 வரமிளகாய்
  31. கறிவேப்பிலை சிறிது
  32. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  33. உப்பு தேவையான அளவு
  34. சென்னா மசாலா வடை:
  35. 1 கப் வெள்ளை சுண்டல்
  36. 15 சின்ன வெங்காயம்
  37. 6 பல் பூண்டு
  38. இஞ்சி சிறிய துண்டு
  39. 5 பச்சை மிளகாய்
  40. கொத்தமல்லி தழை சிறிது
  41. கறிவேப்பிலை சிறிது
  42. 1 ஸ்பூன் சோம்பு தூள்
  43. உப்பு தேவையான அளவு
  44. எண்ணெய் பொரிப்பதற்கு
  45. இனிப்பு சுண்டல் செய்ய:
  46. 1 கப் கடலைப்பருப்பு
  47. 1 மூடி தேங்காய் துருவியது
  48. 1/2 கப் வெல்லம்
  49. 10 முந்திரி
  50. 10 திராட்சை
  51. 2 ஸ்பூன் நெய்
  52. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  53. 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  54. ஜவ்வரிசி பாயாசம் செய்ய:
  55. 1 கப் ஜவ்வரிசி
  56. 3_1/2 கப் தண்ணீர்
  57. 2 கப் சர்க்கரை
  58. 1 மூடி தேங்காய் துருவியது
  59. 15 திராட்சை
  60. 25 முந்திரி
  61. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  62. 2 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தக்காளி சாதம்: மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி சுருள வதங்கியதும் வடித்த சாதம் சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கவும்

  3. 3

    லெமன் சாதம்: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் லெமன் பிழிந்து சாறு எடுத்து ஊற்றி 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதித்து சற்று சுண்டியதும் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    சென்னா மசாலா வடை செய்ய: வெள்ளை சுண்டல் ஐ எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்

  6. 6

    பின் அதனுடன் உப்பு சோம்பு தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  7. 7

    மிக்ஸியில் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து சேர்க்கவும்

  8. 8

    பின் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  9. 9

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் உள்ளங்கையில் வைத்து தட்டவும்

  10. 10

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  11. 11

    மொறுமொறுப்பான வடை தயார்

  12. 12

    இனிப்பு சுண்டல் செய்ய: கடலைப்பருப்பு ஐ இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் அலசி தண்ணீரை வடிகட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் 90% வெந்ததும் வடிகட்டி வைக்கவும்

  13. 13

    பின் நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு முந்திரி திராட்சை ஐ தனித்தனியாக வறுத்து எடுக்கவும் பின் தேங்காய் துருவல் ஐ சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  14. 14

    பின் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பு ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  15. 15

    வெல்லத்துடன் சேர்ந்து வந்ததும் தேங்காய் துருவல் முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்

  16. 16

    பின் ஏலத்தூள் சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கவும்

  17. 17

    ஜவ்வரிசி பாயாசம் ரெடி: என்னடா பாயாசம் என சொல்லிட்டு பால் சொல்லலையே என்று நினைக்காதீர்கள் இது கிராமப்புறங்களில் மிகவும் விரும்பி செய்யப்படும்

  18. 18

    கொதிக்கும் நீரில் ஜவ்வரிசி ஐ சேர்த்து 12 நிமிடங்கள் வரை வேகவிட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தேங்காய் துருவல் சேர்த்து ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  19. 19

    இப்போது பிரசாதங்கள் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes