காலிஃபிளவர் கிரேவி

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 Week10 #Cauliflower #Gravy
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

காலிஃபிளவர் கிரேவி

#GA4 Week10 #Cauliflower #Gravy
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. காலிஃப்ளவர் - அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் - 2
  3. பெரிய தக்காளி - 4
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  6. மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
  7. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  9. லவங்கப்பட்டை - ஒரு துண்டு
  10. கிராம்பு - 4
  11. சோம்பு - அரை டீஸ்பூன்
  12. கொத்தமல்லி - 2 ஆர்க்கு
  13. சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  14. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் வேகவிட்டு எடுத்து வைக்கவும். தக்காளியை துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    வாணலியை சூடாக்கி, சமையல் எண்ணெய்யை ஊற்றி, சூடானதும் லவங்கப் பட்டை, சோம்பு, கிராம்பு ஆகியவற்றை வறுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளி விழுதை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி மூடியிட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

  4. 4

    மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லியை தூவி, ஸ்டவ்வை அணைக்கவும். சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes