உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்

உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)

#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு கால் கிலோ
  2. 50 கிராம்அரிசி மாவு
  3. மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. பெருங்காயம் ஒரு ஸ்பூன்
  6. 500 கிராம்உருளைக்கிழங்கு
  7. பெரிய வெங்காயம் ஒன்று
  8. 4பச்சை மிளகாய்
  9. இஞ்சி சிறிய துண்டு
  10. கொத்தமல்லி இலை சிறிதளவு
  11. கறிவேப்பிலை சிறிதளவு
  12. ஒரு ஸ்பூன்கடுகு
  13. அரை டீஸ்பூன்சோம்பு
  14. ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  15. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  16. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  17. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  18. கால் டீஸ்பூன் ரெட் கலர்
  19. கால் டீஸ்பூன்சோடா உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளைகிழங்கை குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு, ரெட் கலர், சோடா உப்பு, பெருங்காயம் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு இவற்றை தாளிக்கவும்

  3. 3

    கடுகு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி இவற்றை தாளிக்கவும்.பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை மஞ்சள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்

  4. 4

    இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கரைத்து வைத்துள்ள கடலை மாவுடன் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு போண்டா சற்று பொன்னிறம் வந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்

  6. 6

    சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes