ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 1/2கப் கோதுமை மாவு
  2. 2ஸ்பூன் கொக்கொ பவுடர்
  3. 3/4கப் சர்க்கரை பவுடர்
  4. 1/4கப் எண்ணெய்
  5. 1/4கப் தயிர்
  6. 1/2கப் பால்
  7. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 7முந்திரி பருப்பு
  10. 7பாதாம் பருப்பு
  11. கையளவு உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் கோதுமை மாவு, தயிர், எண்ணெய், சர்க்கரை பவுடர்,கொக்கோ பவுடர், பால் சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். உலர் திராட்சை இதில் சேர்த்து கலந்து விடவும். கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி எல்லா இடங்களிலும் படும் படி தட்டி விடவும்.

  3. 3

    இந்த மாவு கலவையை கேக் பாத்திரத்தில் ஊற்றி லேசாக தட்டி விடவும். பிறகு இதன் மேல் பாதாம், முந்திரி பருப்பு அங்கங்கே வைத்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் அடிகனமான கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.பிறகு கடாயில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 35 லிருந்து 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். கேக் வெந்ததும் கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் தயாராகி விட்டது. ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes