ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம்.

ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)

#GA4
ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2கிலோ கோழி கறி
  2. 2 வெங்காயம்
  3. 7பூண்டு பல்
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1 கப் தயிர்
  6. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  7. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 3 ஸ்பூன் மல்லி விதை
  10. 3வரமிளகாய்
  11. 1 ஸ்பூன் மிளகு
  12. 1/2 ஸ்பூன் சோம்பு
  13. 1/2 ஸ்பூன் சீரகம்
  14. 2ஏலக்காய்
  15. 2 கிராம்பு
  16. 1பட்டை
  17. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    1 வெங்காயத்தை பொன்னிறமாகப் பொரித்து அரைக்கவும்.

  2. 2

    சுத்தம் செய்த சிக்கனை மஞ்சள் தூள் தயிர் அரைத்த வெங்காய விழுது சேர்த்து

  3. 3

    நன்கு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

  4. 4

    மல்லி,சீரகம், வரமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்,மிளகு

  5. 5

    இதனை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.

  6. 6

    அதனுடன் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  7. 7

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொரிய விட்டு அரைத்த விழுதை சேர்த்து

  8. 8

    மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும். மெதுவாக கலந்து...

  9. 9

    கறிவேப்பிலை சேர்த்து வேகவிடவும்.

  10. 10

    உப்பு சேர்த்து காஷ்மீரி சில்லி தூள் உடன் மிதமான தீயில் 7 நிமிடங்கள், வேகவிடவும்...

  11. 11

    தேவையான அளவு குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும். இது தோசை மற்றும் சாதத்துடன் சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes