ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Onepot
ஆரோக்கிய சமையலுக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் , நமது அஞ்சரைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு இது.... இதன் விரிவான செய்முறையை இந்த பதிப்பில் காண்போம்....

ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)

#Onepot
ஆரோக்கிய சமையலுக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் , நமது அஞ்சரைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு இது.... இதன் விரிவான செய்முறையை இந்த பதிப்பில் காண்போம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 2வெங்காயம்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 1காரட்
  4. 2வெண்டைக்காய்
  5. 1/4 பகுதி பீர்க்கங்காய்
  6. 1 தக்காளி
  7. 1துண்டு மஞ்சள் பூசணிக்காய்
  8. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. 10 பல் பூண்டு
  10. 1 துண்டு இஞ்சி
  11. 1 ஸ்பூன் மல்லி விதை
  12. 1 ஸ்பூன் வெந்தயம்
  13. 1 ஸ்பூன்சீரகம்
  14. 2ஏலக்காய்
  15. 1 துண்டு பட்டை
  16. 1பிரிஞ்சி இலை
  17. 2கிராம்பு
  18. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  19. உப்பு
  20. 2 ஸ்பூன் மைதா
  21. 1 ஸ்பூன் மிளகு
  22. 2காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் மல்லி மிளகு ஏலக்காய், வரமிளகாய், மிளகு போன்றவற்றை பொடியாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த பொடியை நன்கு சலித்து வைக்கவும்....இதனை அப்படியே குழம்பில் சேர்க்கலாம்....

  3. 3

    இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கலாம், அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தி சிறிது இஞ்சி,துருவல் பூண்டு துருவல், வெங்காயத் துருவல் உடன் இந்தப் பொடி மற்றும் மைதா மாவு கலந்து, அல்வா பதம் வந்த பிறகு ஒரு டப்பாவில் மாற்றி ஆறிய பின்னர் சிறு துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்தலாம்.2 மாதம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன் படுத்தலாம்.

  4. 4

    இது ஒரு பாத்திரத்தில் செய்யக்கூடிய குழம்பு வகை ஆகும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இஞ்சி துருவல் பூண்டு துருவல் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இதை நன்கு வதங்கிய பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    ஆட்டிறைச்சியில் சதைப் பகுதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் இஞ்சி பூண்டை துருவி பயன்படுத்தவும்.

  7. 7

    வெங்காயம் நன்கு வெந்தபிறகு ஆட்டிறைச்சி சேர்க்கவும்.ஆட்டிறைச்சி ஒரு நிமிடம் வதக்கிய பின்பு உருளைக் கிழங்கு காரட் போன்றவற்றை சேர்க்கவும்.

  8. 8

    பின்னர் மஞ்சள், பரங்கிக்காய்,பீர்க்கங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  9. 9

    இந்த காய்கறிகள் காய்கறி மற்றும் இறைச்சி வேகவைக்க தண்ணீர் சேர்க்கவும்.

  10. 10

    கறி நன்கு வெந்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பின்னர் வெண்டைக்காய், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.

  11. 11

    காய்கறிகள் வெந்த பிறகு நாம் செய்து வைத்திருக்கின்ற மசாலா கட்டியில் தேவையான அளவு துண்டுகள் குழம்புடன் சேர்க்கவும்....

  12. 12

    மசாலா கலவை சேர்த்த பின்பு ஒரு நிமிடம் நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

  13. 13

    இது அதிக காரம் இல்லாமல் சற்று இனிப்பு சுவையுடன் வித்தியாசமான குழம்பு வகையாக இருக்கும், மேலும் இதனை பரிமாறும் பொழுது, குறிப்பாக வடித்த சாதம் மற்றும் கிரில் செய்த அசைவத்துடன் பரிமாறவும்.....(நன் சுட்ட மீனுடன் பரிமாறினேன்)....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes