சேமியா தம் பிரியாணி (Semiya dum biryani recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

சேமியா தம் பிரியாணி (Semiya dum biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணிநேரம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம்சேமியா
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3ஏலக்காய் & கிராம்பு
  5. 2பட்டை
  6. 2பச்சை மிளகாய்
  7. 6முட்டை
  8. 10 இலைகள்புதினா
  9. 1 கைகொத்தமல்லி
  10. 1 குழிகரண்டிநல்லெண்ணை
  11. 1 குழிகரண்டிநெய்
  12. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  13. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்ட
  14. 2 டீஸ்பூன்மல்லித்தூள்
  15. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  16. 1/2 முடிதேங்காய் விழுது
  17. தண்ணீர்- தேவையான அளவு
  18. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணிநேரம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை வாடை போன பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு புதினா இலைகள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.

  4. 4

    அதன் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொள்ள வேண்டும்.

  5. 5

    தண்ணீர் (2 டம்ளர்) சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். மசாலா வாடை அடங்கும்வரை கொதிக்கவிட வேண்டும். பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். முட்டைகள் வெந்தபிறகு சேமியாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

  6. 6

    தண்ணீர் வற்றும் வரை சேமியாவை நன்கு சமைத்துக் கொள்ள வேண்டும். சேமியா நன்கு வெந்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் மூடி வைத்து மேலே வெயிட் வைத்து அதன்பிறகு பரிமாற வேண்டும்.

  7. 7

    சுவையான மற்றும் வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes