எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. செட்டிநாடு மசாலா அரைக்க
  2. 1 துண்டு பட்டை
  3. 2ஏலக்காய்
  4. 4கிராம்பு
  5. கறிவேப்பில்லை
  6. 1ஸ்பூன் முழு மிளகு
  7. 1/2ஸ்பூன் சோம்பு
  8. 2ஸ்பூன் கசகசா
  9. 2காய்ந்த மிளகாய்
  10. 2ஸ்பூன்முழு தனியா
  11. 1ஸ்பூன் சீரகம்
  12. சிக்கன் கறி செய்ய
  13. அரை கிலோ சிக்கன்
  14. 2பெரிய வெங்காயம்
  15. 1பச்சை மிளகாய்
  16. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  17. 2தக்காளி
  18. 1ஸ்பூன் மஞ்சத்தூள்
  19. கொத்துமல்லி இலை
  20. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  21. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி வைக்கவும்.
    அடுத்தது கடாயில் எண்ணெய் இன்றி, முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய், பட்டை,ஏலக்காய், சீரகம் மற்றும் கசகசா, கறிவேப்பில்லை சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். அடுத்தது வறுத்த மசாலாவை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் இதில் அரைத்த மசாலா மற்றும் மஞ்சத்தூள், கறிவேப்பில்லை,உப்பு சேர்த்து கிளறவும். பிறகு சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின் கடாயை திறந்து எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கவும். இறுதியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்துமல்லி இலை கிளறி இறக்கவும்.

  4. 4

    சுவையான செட்டிநாடு சிக்கன் கறி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes