சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)

#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள்.
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 1 முதல் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும். பிறகு இதனை நன்கு தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து 1ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அதாவது முக்கால் பதமாக அரைத்து எடுக்கவும்
- 2
இதனை சிறிது சிறிதாக பிடித்து இட்லி சட்டியில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, 1\2 ஸ்பூன் சோம்பு தாளித்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, தக்காளியையும் பொடியாக அரிந்து சேர்த்து அடுப்பை சிறிது குறைவான தணலில் வைத்து நன்கு மசிய வதக்கி விடவும். இதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 5
இதனையும் ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கி விட்டு தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் ஊற்றவும்
- 6
அடுப்பை அதிக தணலில் வைத்து தண்ணீர் கொதி வர விடவும்
- 7
கொதி வர ஆரம்பித்ததும் தேங்காய் விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து மீண்டும் கொதி வர விடவும்
- 8
இப்போது வேக வைத்து எடுத்துள்ள கறியை கையால் சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு அதனுடன் சேர்க்கவும்
- 9
இப்போது 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இப்போது வடகறி சரியான பதத்திற்கு(semi solid) வந்துவிடும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
- 10
டேஸ்டியான, சென்னை வடகறி. ரொம்ப எளிமையான முறையில் ருசியாக செய்து விடலாம். இட்லி, தோசை, பூரி க்கு சூப்பரான சைட் டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
வடகறி(vada curry recipe in tamil)
#pongal2022செய்து முடித்து புகைப்படம் எடுப்பதற்குள் காலியாகி விட்டது.மிகவும் எளிமையான மற்றும் சுவையான செய்முறை ஆகும். Ananthi @ Crazy Cookie -
-
-
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
வடகறி (vada curry recipe in Tamil)
#vattaramஇந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி parvathi b -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
-
-
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
தேங்காய் பிரியாணி
இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.#vattaram குக்கிங் பையர் -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
சவாலா ரோஸ்ட் கறி (Onoin roast curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரபலமான பெற்ற கறிகளில் இந்த சவாலா கறியும் ஒன்று. மிகவும் அருமையாக சுவையில் உள்ளது. Renukabala -
-
சிக்கன் வடகறி(Chicken vadacurry recipe in tamil)
#vadacurry இந்த ரெசிப்பியை முதன் முறையாக செய்துள்ளேன்.. அருமையாக இருந்தது.. Muniswari G -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
கமெண்ட் (2)