எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட் மேகி
  2. 1பாக்கெட் மேகி மசாலா பொடி
  3. 1 வெங்காயம்
  4. 1/2 குடமிளகாய்
  5. 1/2உருளைக்கிழங்கு
  6. 1 கேரட்
  7. 1/2கப் பட்டாணி
  8. 1/2ஸ்பூன் வர மிளகாய் தூள்
  9. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1/4ஸ்பூன் பெப்பர் தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 2கப் இட்லி மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் 1 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி மேகியை உடைத்து போட்டு மசாலா சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    குக்கரில் உருளைக்கிழங்கு கேரட் பட்டாணி தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த மேகி மசித்து வைத்த உருளைக்கிழங்கு கேரட் பட்டாணி சேர்த்து வெங்காயம் குடமிளகாய் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    பின் சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும்.

  5. 5

    இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து கொஞ்சமாக இட்லி மாவு ஊற்றி தட்டிய மேகி மசாலா ஸ்டப் வைத்து மேலே இன்னும் கொஞ்சம் இட்லி மாவை ஊற்றி வைக்கவும்.

  6. 6

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் வைத்து வேக விடவும்.

  7. 7

    இட்லி வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறவும். மேகி மசாலா ஸ்டப்டு இட்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes