எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1- காலிபிளவர்
  2. 3- முட்டை
  3. 2டீஸ்பூன்- பொடியாக நறுக்கிய பூண்டு
  4. 1 டீஸ்பூன்- பொடியாக நறுக்கிய இஞ்சி
  5. 2- பெரிய வெங்காயம்
  6. 2- தக்காளி
  7. 2- பச்சை மிளகாய்
  8. சிறிதுகொத்தமல்லி இலை கறிவேப்பிலை
  9. 1/2 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  10. 1/2 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
  11. 1 டீஸ்பூன்- மல்லித்தூள்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1/2 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  14. 3 டீஸ்பூன் - எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அதில் காலிபிளவர் சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்..இவ்வாறு செய்வதால் காலிஃப்ளவரில் உள்ள புழுக்கள் எதுவும் இருந்தால் சுடுதண்ணீரில் வெளியே வந்துவிடும் இப்பொழுது ஆறியவுடன் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வேகவிடவும் பின்பு எடுத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.நன்றாக எண்ணெயில் மசால் பொருட்கள் கலந்தவுடன் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காலிஃப்ளவர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். பின்பு 3 முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மூடி போட்டு வேக விட்டு நன்றாக கலந்து கொள்ளவும் முட்டையை நன்றாக உதிரியாக மாறும் வரை நன்றாக வதக்கவும் இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலை கருவேப்பிலை தூவி இறக்கவும் இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் தயார். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes