எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. 20 சிறிய வெங்காயம் உரித்தது
  2. 2பெரிய தக்காளிநறுக்கியது
  3. 6 காய்ந்த மிளகாய்
  4. ஒரு சிறிய துண்டு புளி
  5. ஒரு டீஸ்பூன் கடுகு
  6. ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. தேவையானஉப்பு
  10. தாளிக்க நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் வற்றல் இவற்றை லேசாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி புளி உப்பு சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.

  3. 3

    ஆறியவுடன் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

  4. 4

    ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து கொட்டவும்.

  5. 5

    சுவையான தக்காளி வெங்காய சட்னி ரெடி. இது இட்லி தோசை இவற்றிற்கு அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes